×

தமிழ் படம் தயாரித்தது ஏன்? ..டோனி விளக்கம்

சென்னை: டோனி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி சாக்‌ஷி தயாரித்துள்ள படம் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்). அவரே கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இசை அமைத்து, இயக்கி உள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் டோனி பேசியதாவது: எனது மனைவிக்கு மீடியா மீது தனி ஆர்வம் இருந்தது. அதற்கு நான் தடைபோடவில்லை. சினிமா தயாரிக்க வேண்டும் என்று சொன்னபோது நான் தமிழில் தயாரிக்கச் சொன்னேன். காரணம் சென்னை எனக்கு எப்போதுமே சிறப்பானது.

எனது கிரிக்கெட் கேரியரை ஆரம்பித்தது சென்னையில்தான், அதிக பட்ச ரன்கள் எடுத்தது சென்னையில்தான். அதிக வெற்றிகளை குவித்ததும் சென்னையில்தான். அதிகமான அன்பை தரும் ரசிகர்கள் இருப்பதும் சென்னையில்தான். இன்னும் பல நல்ல விஷயங்கள் எனக்கு சென்னையில் நடந்தது. சிலவற்றை நான் இங்கே சொல்ல முடியாது. சென்னை ரசிகர்கள் எனக்கு தரும் அன்புக்கு ஈடாக இதை நான் செய்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதனால்தான் தமிழ்படம் தயாரிக்கும் ஆர்வம் வந்தது.

சினிமா தயாரிப்பில் நான் தலையிட மாட்டேன். சில யோசனைகளை சொல்வேன், படம் பார்த்து கருத்து சொல்வேன் என்று சாக்‌ஷியிடம் கூறினேன். அதேபோல இந்த படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவருக்குமான படம். நான் என் அம்மா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறேன். அப்படியான ஒரு பாசத்தை சொல்லும் படம். ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்பதை சொல்லும் படம். படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்றார்.

The post தமிழ் படம் தயாரித்தது ஏன்? ..டோனி விளக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tony ,Chennai ,Sakshi ,Tony Entertainment ,Harish Kalyan ,Ivana ,Nadia ,Yogibabu ,Ramesh Tamilmani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பான் இந்தியா படங்களிலும் சாக்‌ஷி அகர்வால்