×

உலகின் இனிய தீவிரவாதி நான்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு

சண்டிகர்: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறது. இந்நிலையில், இக்கட்சியின் முன்னாள் தலைவரான குமார் விஷ்வாஸ், பஞ்சாப் பிரிவினைவாதிகளுக்கு கெஜ்ரிவால் ஆதரவு அளிப்பதாக சமீபத்தில் குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில், காங்கிரசும், பாஜ.வும் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து வருகின்றன.இது தொடர்பாக சண்டிகரில் நேற்று கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், ‘‘100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள்  பகத்சிங்கை தீவிரவாதி என்று அழைத்தனர். 100 ஆண்டுகளுக்கு பின் வரலாறு மீண்டும் திரும்புகிறது. இந்த கட்சிகள் அனைத்தும் பகத்சிங்கை பின்பற்றும் சீடரை (கெஜ்ரிவால்) தீவிரவாதி என்று நிரூபிப்பதற்கு விரும்புகின்றன. ஆனால், உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும். விஸ்வாஸ் குற்றச்சாட்டுக்கு பலம் சேர்ப்பதற்காக பாஜ, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது நகைப்புக்குரியது.பள்ளிகள், மருத்துவமனைகளை அதிகமாக கட்டும் உலகின் மிக இனிமையான தீவிரவாதி நான்தான்,” என்றார்….

The post உலகின் இனிய தீவிரவாதி நான்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kejriwal ,Chandigarh ,Aam Aadmy ,Delhi ,Arvind Kejriwal ,Punjab ,Goa ,
× RELATED ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி...