×

தோல்வியின் பிடியில் தென் ஆப்ரிக்கா

நியூசிலாந்து – தென் ஆப்ரிக்கா இடையே கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 95 ரன்னுக்கு சுருண்டது. ஹென்றி 7 விக்கெட் வீழ்த்தினார். முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்திருந்த நியூசி. 2ம் நாளான நேற்று 482 ரன் குவித்து ஆல் அவுட்டானது (கான்வே 36, நிகோல்ஸ் 105, வேக்னர் 49, பிளண்டெல் 96, கிராண்ட்ஹோம் 45, ஹென்றி 58*). இதையடுத்து, 387ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தெ.ஆப்ரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன் என தோல்வியின் பிடியில் சிக்கியது. பவுமா 22, டசன் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். துல் – லலித் அசத்தல்தமிழகத்துக்கு எதிராக டெல்லி அணி முதல் இன்னிங்சில் 452 ரன் குவித்து ஆல் அவுட்டானது. யாஷ் துல் 113, லலித் யாதவ் 177 ரன் குவித்தனர். தமிழ்நாடு தரப்பில் முகமது  4, அபராஜித், வாரியர் தலா 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு  75 ரன் எடுத்துள்ளது. கவுசிக் காந்தி 37, சாய் கிஷோர் 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.அறிமுக வீரர் முச்சதம்பீகாரைச் சேர்ந்த  ஷகிபுல் கனி (22) தனது அறிமுக ரஞ்சி போட்டியிலேயே முச்சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார். கொல்கத்தாவில் மிசோரம் அணியுடன் நடக்கும் இப்போட்டியில், பீகார் 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்து திணறிய நிலையில் பபுல் குமார், அறிமுக வீரர் ஷகிபுல் கனி இணைந்து 4 வது விக்கெட்டுக்கு 538 ரன் சேர்த்து நேற்று புதிய சாதனை படைத்தனர். முச்சதம் விளாசிய ஷகிபுல் 341 (405 பந்து, 56 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்னில்  ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் ஒருவர் முதல் தர ஆட்டத்தில் முச்சதம் விளாசியது இதுவே முதல்முறையாகும். பீகார் முதல் இன்னிங்சில்  5 விக்கெட் இழப்புக்கு 686 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இரட்டைச் சதம் விளாசிய பபுல் 229* (398 பந்து, 27 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் இருந்தார். மிசோராம் 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்துள்ளது.ஆஸ்திரேலியா ஆதிக்கம்இலங்கை அணியுடன் மெல்போர்னில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 4-0 என முன்னிலை பெற்றது. இலங்கை 20 ஓவரில் 139/8 (நிசங்கா 46, குசால் 27, அலங்கா 22). ஆஸி. 18.1 ஓவரில் 143/4 (ஏகார் 26, மேக்ஸ்வெல் 48*, இங்லிஸ் 40). 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மெல்போர்னில் நாளை நடக்கிறது.ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்சீனாவின் ஹாங்சோ நகரில் இந்த ஆண்டு நடக்க உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. இந்த தொடருக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகளை அனுப்புவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப்போட்டி நடைபெறும் செப்டம்பர் மாதத்தில்  மகளிர் அணி, இங்கிலாந்தில் விளையாட உள்ளது. இந்திய அணியும் டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது….

The post தோல்வியின் பிடியில் தென் ஆப்ரிக்கா appeared first on Dinakaran.

Tags : South Africa ,New Zealand ,Christchurch ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...