- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- மாரி செல்வராஜ்
- வடிவேலு
- பஹத் பசில்
- கீர்த்தி சுரேஷ்
- உதயநிதி ஸ்டாலின்
- லெச்சி
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘மாமன்னன்’ படம் திரைக்கு வந்தது. இதை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற சக்சஸ்மீட்டில் நெகிழ்ச் சியுடன் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘எனது கடைசி படமான ‘மாமன் னன்’ படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்து பெரிய வெற்றிபெற்றுள்ளது. அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. 510 திரைகளில் படத்தை வெளியிட்டோம். தற்போது 2வது வாரத்தில் 470 திரைகளில் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. நல்ல வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. மாரி செல்வராஜிடம் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் படம் இயக்க வாய்ப்பு கொடுத்தேனோ அதை நிறைவேற்றியுள்ளார். ‘மாமன்னன்’ படம் 9 நாட்களில் 52 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது. எனது படங்களிலேயே இதுதான் அதிக வசூல் செய்துள்ள படமாகும்’ என்றார்.
வடிவேலு பேசும்போது, ‘நான் நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு இருந்தது. காமெடி செய்ய வாய்ப்பு இல்லை.
டைரக்டர் தரவும் இல்லை. இந்த படத்தின் மாமன்னன் மாரி செல்வராஜ்தான். இந்த கதையை ஒப்புக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் மன்னாதி மன்னன். நான் ஒரு குறுநில மன்னன். 20, 30 படங்களை இயக்கிய அனு
பவத்தை மாரி செல்வராஜிடம் பார்த்தேன். வாழ்க்கையில் பசி, பட்டினியை பார்த்துவிட்டு வந்தவன் நான். மாரி செல்வராஜூம் அப்படியே. அதனால்தான் அவருடன் என்னால் கனெக்ட் ஆக முடிந்தது. நான் சிரிக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்ட ஒரே படம் இதுதான். ஷூட்டிங்கில் யாரையும் சிரிக்க வைத்துவிடக் கூடாது என்று போராடினேன். ‘மாமன்னன்’ படம் பார்த்துவிட்டு இரவு 11 மணிக்கு போன் செய்து தமிழக முதல்வர் பாராட்டி னார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலரும் என்னை பாராட்டினார்கள்’ என்றார்.
The post எனது கடைசி படம் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.