×

`அஸ்வின்ஸ்’ 2வது பாகம்

‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ள வசந்த் ரவி கூறுகையில், ‘திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் என்னைப் போன்ற ஒரு நடிகருக்கு வெற்றி என்பது மிகவும் முக்கியமானது. ‘அஸ்வின்ஸ்’ வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. தருண் தேஜா எனர்ஜியான ஒரு இயக்குனர். ‘ராக்கி’ பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்போது தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ படம் இயக்குவது போல், தருண் தேஜாவுக்கும் முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு விரைவில் கிடைக்கும். ‘அஸ்வின்ஸ்’ படம் வெளியான தியேட்டர்களுக்கு நான் சென்றபோது, ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இப்படம் எங்கள் படக்குழுவினருக்கு ரொம்ப ஸ்பெஷல். விரைவில் ‘அஸ்வின்ஸ்’ படத்தின் 2வது பாகத்தை உருவாக்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று நம்புகிறேன்’ என்றார். தற்போது ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’, சத்யராஜூடன் ‘வெப்பன்’ ஆகிய படங்களில் வசந்த் ரவி நடித்து வருகிறார்.

 

The post `அஸ்வின்ஸ்’ 2வது பாகம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vasant Ravi ,Tarun Teja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்