×

கொரோனா எதிரொலி; மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள்.! இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு

மும்பை: கொரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஐ.பி.எல். சீசனில் புதிதாக லக்னோ, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. 10 அணிகள் பங்கேற்பதால், ஐ.பி.எல். போட்டியின் ஆட்டங்கள் 74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒரே இடத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மும்பை, புனேயில் உள்ள 5 மைதானங்களில் போட்டி நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானம், டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம், பிரபோர்ன் மைதானம், நவி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டேடியம், புனேயில் உள்ள மைதானம் உள்ளிட்ட 5 இடங்களில் போட்டி நடக்கிறது. உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் பிளே- ஆப் சுற்று மற்றும் இறுதி போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை அறிவிக்கிறது. அடுத்த வாரம் இந்த அட்டவணை வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 20 ஓவர் தொடர் லக்னோ, தர்மசாலாவிலும், டெஸ்ட் தொடர் மெகாலி பெங்களூரிலும் நடக்கிறது. இதேபோன்று ஐ.பி.எல். போட்டிகள் ஒரே பகுதியில் நடத்தப்படுகிறது….

The post கொரோனா எதிரொலி; மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள்.! இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு appeared first on Dinakaran.

Tags : corona echo ,IPL league ,Maharashtra ,Indian Cricket Board ,Mumbai ,Corona ,IPL ,Board of Control for Cricket ,India ,Dinakaran ,
× RELATED டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை...