×

செப்டம்பர் 7ல் ஷாருக்கானின் ‘ஜவான்’

கோலிவுட் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘ஜவான்’. இப்படத்தின் திரையரங்குகள் அல்லாத உரிமைகள் 250 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் இரட்டை வேடங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார். முக்கிய கேரக்டர்களில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, கவுரவ வேடங்களில் தீபிகா படுகோன், சஞ்சய் தத் நடித்திருக்கின்றனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், முதலில் கடந்த ஜூன் 2ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் திட்டமிட்டபடி முடியாததால், வரும் செப்டம்பர் 7ம் தேதிக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்த நிலையில், ஷாருக்கானின் ‘பதான்’ படம் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை அள்ளியது. இதனால், ‘ஜவான்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

The post செப்டம்பர் 7ல் ஷாருக்கானின் ‘ஜவான்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shah Rukh Khan ,India ,Kollywood ,Atlee ,Nayanthara ,Vijay Sethupathi ,Yogi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மைதான் இந்தி விமர்சனம்