×

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 276 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கிறிஸ் ட்சர்ச்சில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 95 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்தின் மேட் ஹென்றி 7 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல்இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணியில் நிக்கோல்ஸ் 105, டாம் ப்ளன்டெல் 96 ரன் எடுக்க 117.5 ஓவரில் 482ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. இதையடுத்து 387 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்ரிக்கா நேற்றைய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன் எடுத்திருந்தது. 3வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய தென்ஆப்ரிக்கா 41.4 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பவுமா 41 ரன் எடுத்தார். நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தி 5, ஹென்றி, வாக்னர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஹென்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது டெஸ்ட் வரும் 25ம் தேதி தொடங்குகிறது….

The post தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 276 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி appeared first on Dinakaran.

Tags : South Africa ,New Zealand ,Christchurch ,Chris ,Churchill ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்