×

‘ராஜாகிளி’ படத்துக்கு யு/ஏ

சென்னை: வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம், ‘ராஜாகிளி’. இதில் கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்க, ஹீரோயின்களாக சுவேதா ஷ்ரிம்டன், சுபா தேவராஜ் நடித்துள்ளனர். மற்றும் தம்பி ராமய்யா, ‘ஆடுகளம்’ நரேன், பாடகர் கிரிஷ், அருள்தாஸ், பிரவீன் குமார், தீபா, வெற்றிக்குமரன், சுரேஷ் காமாட்சி, ஆண்ட்ரூஸ் சேவியர், டேனியல் போப், பழ.கருப்பையா, ரேஷ்மா பசுபுலேட்டி, ஐஸ்வர்யா பாஸ்கரன், ‘சாட்டை’ துரைமுருகன், கொட்டாச்சி நடித்துள்ளனர்.

தம்பி ராமய்யாவின் மகனும், நடிகருமான உமாபதி ராமய்யா திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். தம்பி ராமய்யா கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். ‘சாட்டை’, ‘அப்பா’, ‘விநோதய சித்தம்’ ஆகிய படங்களை தொடர்ந்து சமுத்திரக்கனி, தம்பி ராமய்யா கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. கோபிநாத், கேதார்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சாய் தினேஷ் பின்னணி இசை அமைத்துள்ளார். விரைவில் திரைக்கு வரும் இப்படத்துக்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

The post ‘ராஜாகிளி’ படத்துக்கு யு/ஏ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : U/A ,Chennai ,Suresh Kamakshi ,V House Productions ,Samuthirakani ,Swetha Shrimpton ,Subha Devaraj ,Ramaiah ,Adukulam' ,Naren ,Krish ,Aruldas ,Praveen ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...