×

கவுதமன் இயக்கி நடிக்கும் ‘மாவீரா படையாண்டவன்’ ஆனது மாவீரா

சென்னை: உண்மைச்சம்பவம் ஒன்றை மையப்படுத்தி வி.கே புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்தை வ.கவுதமன் எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், ‘பாகுபலி’ பிரபாகர், ரெடின் கிங்ஸ்லி, ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, தீனா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் நடிக்க, ஹீரோயினாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். எஸ்.கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி வர்மன் வசனம் எழுதுகிறார். விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில், இப்படத்துக்கு முதலில் சூட்டப்பட்டிருந்த ‘மாவீரா’ என்ற தலைப்பு தற்போது ‘மாவீரா படையாண்டவன்’ என்று மாற்றப்பட்டுள்ளது. விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்குகிறது.

The post கவுதமன் இயக்கி நடிக்கும் ‘மாவீரா படையாண்டவன்’ ஆனது மாவீரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Gauthaman ,Maveera ,Chennai ,VK Productions ,V. Goudaman ,Samuthirakani ,Radharavi ,Mansoor Ali Khan ,Baahubali' Prabhakar ,Redin Kingsley ,Aadukalam' Naren ,Illasasu ,Deena ,Rajendran ,Gowthaman ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...