×

தென்சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்ட 24 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: தென்சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்டங்களில்  அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்ட 24 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு:  தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த திலகவதிபாபு (ஆயிரம்விளக்கு வடக்கு பகுதி இணைச்செயலாளர்),செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (22வது வார்டு – பல்லாவரம் நகர ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர்), முத்துராமன் (23வது வார்டு – பல்லாவரம் நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர்), லட்சுமி (க/பெ. காசி, 27வது வார்டு), ஆசியா (க/பெ. மகேந்திரன், 28வது வார்டு), லட்சுமி (க/பெ. பெருமாள், 28வது வார்டு),நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நடராஜ் (மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர்), சாதிக் (மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு பொருளாளர்), மகேஷ்குமார் (உதகமண்டலம் நகர கழக பொருளாளர்), வினோத்குமார் (உதகமண்டலம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர்), லட்சுமி (க/பெ. ராஜா, உதகமண்டலம் நகர 33வது வார்டு), சங்கீதா (கோத்தகிரி பேரூராட்சி 10வது வார்டு), ராமசாமி (கூடலூர் நகர  மாவட்ட பிரதிநிதி),தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (கீழவாசல் பகுதி இலக்கிய அணி செயலாளர்), பெரியசாமி (மாநகராட்சி 20வது வட்ட செயலாளர், கோட்டை பகுதி), திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் (திண்டுக்கல் மாநகராட்சி 25வது வட்ட மேலமைப்புப் பிரதிநிதி )ஆகியோர் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பு:செங்கல்பட்டு மேற்கு, நீலகிரி, தஞ்சாவூர் தெற்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுகின்ற காரணத்தால்,செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தை சேர்ந்த காசி (பல்லாவரம் நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர்), மகேந்திரன் (பல்லாவரம் நகர மாணவர் அணி துணைச்செயலாளர்), பெருமாள் (பல்லாவரம் நகர 41வது வார்டு மேலமைப்பு பிரதிநிதி), இளங்கோவன் (பல்லாவரம் நகர 41வது வார்டு மேலமைப்பு பிரதிநிதி)நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (கோத்தகிரி பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர்), ராஜா (உதகமண்டலம் நகர 33வது வார்டு  செயலாளர்), தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர்), திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி (திண்டுக்கல் மேற்கு பகுதி எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர்) ஆகியோர், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்….

The post தென்சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்ட 24 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Densennai ,Chengalpattu ,Nilgiri ,Thanjavur ,Dintugul ,OPS ,EPS ,Chennai ,Tenchennai ,Tensennai ,Thindugul ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி...