சிம்மம்

சூரியன், சுக்கிரன் ராசியை பார்ப்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். உத்யோக வகையில் சாதகமான மாற்றம் வரும். எதிர்பார்த்த லோன் பணம் வார மத்தியில் கிடைக்கும். செவ்வாயின் அமைப்பு காரணமாக வீட்டில் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். தாய் வழி உறவுகளால் அலைச்சல், செலவுகள் வரும். பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். குருவின் பார்வை காரணமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இனிக்கும் செய்தி உண்டு. வீட்டில் வயதானவர்கள் மூலம் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

பரிகாரம்: அம்மன், அம்பாள் கோயிலுக்கு விளக்கேற்ற நெய், எண்ணெய் வாங்கித் தரலாம். உடல் நலம், மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்திற்கு உதவலாம்.

>