×

காய்கறி கழிவுகளில் இருந்து தயாரிப்பு பயோகாஸ் மூலம் ஓடும் 400 அரசு பேருந்துகள்: மபி.யில் நாளை முதல் தொடக்கம்

இந்துார்: மத்திய பிரதேசத்தில் பயோ காஸ் மூலம் இயக்கப்படும்  பேருந்துகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக நாளை துவக்கி வைக்கிறார். மத்திய பிரதேச மாநிலம், இந்துார் மாநகராட்சி சார்பில் தேவ்குராடியா என்ற இடத்தில் ரூ.150 கோடி செலவில் பயோ காஸ் (சிஎன்ஜி) ஆலை அமைக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட மிக பெரிய பயோ காஸ் ஆலை இது. இந்த ஆலை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த ஆலைக்கு தினந்தோறும் வரும் பழங்கள், காய்கறிகள், பச்சை இலைகள், பூக்கள் போன்ற 550 டன் ஈரமான கழிவுகள் மூலம்  19,000 கிலோ பயோ காஸ் (சிஎன்ஜி) உற்பத்தி ஆகிறது. இதில் உற்பத்தியாகும் பயோ காஸ் மூலம் நகரில் 400  பேருந்துகளை இயக்கலாம். தற்போது, பேருந்துகள் அனைத்தும் டீசலில் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளின் வடிவமைப்பை சிறிது மாற்றினால் பயோ காஸை பயன்படுத்தி இயக்க முடியும். இவை அனைத்தும் படிப்படியாக பயோ காஸ் பேருந்துகளாக மாற்றப்படும். முதல் கட்டமாக இந்த மாதத்தில் 55 பேருந்துகள் மாற்றம் செய்யப்படும். பயோ காஸ் பேருந்து சேவை விழா நாளை நடக்கிறது. பிரதமர் மோடி காணொலி வாயிலாக இதனை துவக்கி வைக்கிறார்’’ என்று தெரிவித்தனர்.* இந்துார் மாநகராட்சியின் மக்கள் தொகை 35 லட்சம். இங்குள்ள பல பகுதிகளில் இருந்து தினந்தோறும் 700 டன் ஈரமான கழிவுகள், 400 டன் உலர் கழிவுகள் அப்புறப்படுத்துகிறது. * இந்துார் மாநகராட்சி கடந்த 5 ஆண்டுகளாக நாட்டிலேயே மிக துாய்மையான நகருக்கான ‘ஸ்வச் பாரத்’ விருதை வென்று வருகிறது  குறிப்பிடத்தக்கது….

The post காய்கறி கழிவுகளில் இருந்து தயாரிப்பு பயோகாஸ் மூலம் ஓடும் 400 அரசு பேருந்துகள்: மபி.யில் நாளை முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Mabi ,J.P. ,Modi ,BioCas ,Madhiya Pradesh ,Dinakaran ,
× RELATED மபி வனப்பகுதியில் சென்ற போது...