×

33வது வார்டு பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம்: குணசுந்தரி குட்டி மோகன் பிரசாரம்

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 33வது வார்டு திமுக வேட்பாளர் குணசுந்தரி குட்டி மோகன் நேற்று கடப்பா சாலை, வில்லிவாக்கம் சாலை, சாரதி நகர், ஆதிலட்சுமி நகர், லட்சுமிபுரம், வ.உ.சி.தெரு, டீச்சர்ஸ் காலனி, குமரன் தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, பாரதியார் தெரு, ராஜாஜி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வேட்பாளர் குணசுந்தரி குட்டி மோகன் பொதுமக்களிடம் பேசுகையில், ‘‘வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ வாட்டர் குழாய் அமைப்பேன். டீச்சர்ஸ் காலனி, லட்சுமி நாராயண பெருமாள் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன். செல்லியம்மன் மண்ணடி பகுதியில் புதிதாக பூங்கா, சமுதாயக்கூடம், மக்கள் நல மருத்துவமனை அமைப்பேன். தனி அலுவலகம் அமைத்து மக்களின் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும். ஸ்ரீ அஞ்சனா தேவி அறக்கட்டளை சார்பில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா ஊரடங்கு காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவு, அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் இலவச ஆட்டோக்கள், தையல் மெஷின்கள், அயன் பாக்ஸ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இதுபோன்ற நல்ல திட்டங்கள் தொடர உதயசூரியனுக்கு வாக்களித்து என்னை வெற்றிபெற செய்ய வேண்டும்,’’ என்றார்….

The post 33வது வார்டு பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம்: குணசுந்தரி குட்டி மோகன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Gunasundari Kutty Mohan ,Puzhal ,DMK ,33rd ,Chennai Corporation ,Madhavaram Mandal ,Kadapa Road ,33rd Ward ,Dinakaran ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு