×

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வேலம்மாள் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்

திருவள்ளூர்: சென்னை, முகப்பேர், வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் என்சிசி கடற்படைப் பிரிவு சார்பில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பள்ளியின் தாளாளர் எம்விஎம்.வேல்மோகன் தலைமை வகித்தார். பிரசாரத்தை போக்குவரத்து மற்றும் விசாரணைப் பிரிவு இன்ஸ்பெக்டர் கௌசல்யா சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்தப் பிரசாரம் பொதுமக்கள் தங்கள் ஜனநாயக உரிமையைத் தவறாமல் கடைபிடித்து வாக்களிக்கும்படி ஊக்குவிப்பதை வலியுறுத்தியது. வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தவும், 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யவும் வலியுறுத்தும் பதாகைகளையும் மாணவர்கள் காட்சிப்படுத்தினர். மேலும் பொதுமக்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன….

The post 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வேலம்மாள் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Velammal school ,Tiruvallur ,NCC Naval Unit ,Velammal Primary School ,Mukappher, Chennai ,Velammal ,School ,
× RELATED திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை