×

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கென தனி பிரஸ் கவுன்சில்: முதல்வர் ஒப்புதல் தந்துள்ளதாக ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டிற்கென தனி பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது சேகர்ராம் போலி பத்திரிகையாளர் என்று பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க விதிகள் உள்ளனவா என்றும், மத்திய அரசு சட்டப்படி இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில பிரஸ் கவுன்சில்கள் அமைக்க சட்டங்கள் உள்ளனவா என தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், செய்தி மற்றும்  மக்கள் தொடர்பு துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு விரைவில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைப்பை உருவாக்க  முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்காக விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்….

The post உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கென தனி பிரஸ் கவுன்சில்: முதல்வர் ஒப்புதல் தந்துள்ளதாக ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : ICORT ,Chief Minister ,Press Council for Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Government ,Ikordt Government ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...