×

சார்லி நடிக்கும் ‘ஃபைண்டர்’

நாட்டையே உலுக்கிய உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரில்லர் படம், ‘ஃபைண்டர்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டனர். அரபி புரொடக்‌ஷன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம், விஜயன் வென்ச்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன் தயாரித்துள்ளனர். பிரசாந்த் வெள்ளிங்கிரி ஒளிப்பதிவு செய்ய, சூர்ய பிரசாத் இசை அமைத்துள்ளார். வினோத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். அமெரிக்காவில், செய்யாத குற்றத்துக்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை தேடிக் கண்டுபிடிக்கிறது ஒரு நிறுவனம்.

அவர்களை நிரபராதிகள் என்று நிரூபித்து, அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டுத் தொகையை வாங்கிக் கொடுக்கும் பணியைச் செய்கிறது. இந்நிறுவனத்தைப் பற்றிய அடிப்படையில், சென்னை பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதன்மை வேடத்தில் சார்லி மற்றும் முக்கிய வேடங்களில் வினோத் ராஜேந்திரன், சென்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், பிரானா நடித்துள்ளனர்.

The post சார்லி நடிக்கும் ‘ஃபைண்டர்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Charlie ,Lukkai ,Vijay Sedhubathi ,S.S. ,JJ Surya ,Rajif Subramaniam ,Arabic Production ,Vinod Rajendran ,Vijayan Ventures ,Prasanth Silverbri ,Cinematograph ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வேட்பாளரை எச்சரித்த டொவினோ தாமஸ்