×

வசந்த் ரவி ஜோடியாக மெஹ்ரின்

நயன்தாராவின் ‘ஐரா’, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த ‘நவரசா’ ஆகிய படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு டைட்டில் முடிவாகவில்லை. முன்னதாக அவர், ஓடிடியில் வெளியான ‘வி ஆர் பிரெக்னன்ட்’ என்ற தொடரை இயக்கியுள்ளார். புதிய படத்தை ஜெ.எஸ்.எம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக், எம்பரர் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் இர்ஃபான் மாலிக் தயாரிக்கின்றனர். ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’, ‘ஜெயிலர்’, ‘வெப்பன்’ ஆகிய வித்தியாசமான கதைக்களங்களில் நடித்துள்ள வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கிறார்.

அவரது ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர், தமிழில் தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ படத்தில் நடித்திருந்தார். தவிர, ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் குமார், நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், சுனில், நடன இயக்குனர் கல்யாண் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். பிராபகரன் ராகவன் ஒளிப்பதிவு செய்ய, ‘சொப்பன சுந்தரி’ அஜ்மல் தசீன் இசை அமைக்கிறார். இப்பட விழாவில் பங்கேற்ற இயக்குனர் அமீர், வசந்த் ரவியை வாழ்த்தினார்.

The post வசந்த் ரவி ஜோடியாக மெஹ்ரின் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mehrin ,Vasant Ravi ,Sabareesh Nanda ,Nayantara ,Madras Talkies' ,OTT ,JSM Productions… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அமீர், வசந்த் ரவி, ஆனந்தி படங்களில் சமூக கருத்து