×

ஆந்திர மாநிலத்தில் மக்களுடன் சந்திப்பு ஆளும் கட்சி அரசுக்கு எதிராக வீடு, வீடாக துண்டு பிரசுரம் விநியோகம்-தெலுங்கு தேசம் கட்சியினர் அதிரடி

சித்தூர் : சித்தூர் மண்டலம் குவ்வ கல்லு அரிஜன வாடா பகுதியில்  தெலுங்கு தேசம் கட்சியினர் வீடு வீடாகச் சென்று ஆளும் கட்சி ஆட்சி குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசாரம் செய்தனர். இதில் எம்எல்சி துரை பாபு தலைமையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன்  முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அத்தியாவசிய பொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காஸ், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால்  அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் வகையில் உயர்ந்து உள்ளது. இதனால் ஏழை எளிய, சாமானிய மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் சந்திரபாபு முதலமைச்சராக இருந்தபோது பெட்ரோல் டீசல் விலை மீது வரி விலக்கு செய்து ஒரு லிட்டர் மீது 5 ரூபாய் குறைக்கப்பட்டது.தற்போது அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஆந்திர மாநிலத்தில் 113 ரூபாய் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஏழை எளிய மக்கள் காய்கறிகள் வாங்க வேண்டும் என்றால் அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று எதிரொலியால் மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தது. ஆனால் ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சி அரசு ஆந்திர மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு நலத்திட்ட உதவிகள் கூட செய்யவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.அதேபோல் முதல்வர் ஜெகன் மோகன் ₹25 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதாக தெரிவித்து வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு ஒரு சென்ட் நிலம் வீட்டுமனை பட்டா வாங்க வழங்கியுள்ளார். இந்த ஒரு சென்டில் ஒரு அறை கூட கட்ட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு இரண்டு சென்ட் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி இரண்டரை இலட்சம் வீட்டு கடன் வழங்கினார். ஆனால் தற்போதுள்ள முதல்வர் ஒரு சென்ட் நிலம் வழங்கி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். அதேபோல் கார் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து, மின் கட்டணம் ₹700 ரூபாய்க்கு மேல் வந்தான் ரேஷன் கார்டு ரத்து, ஏசி இருந்தால் ரேஷன் கார்டு ரத்து என ஆளும் கட்சி அரசு தெரிவித்து வருகிறது.அதேபோல் முதியோர் உதவித்தொகை ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தால் அவர்களின் முதியோர் உதவித்தொகை ரத்து செய்து வருகின்றனர். இதை எதிர்த்து கேட்டால் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது ரேஷன் வழங்கப்படமாட்டாது என  மிரட்டி வருகின்றனர்.மேலும் நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தால் அவர்களை மிரட்டுவது அடிப்பது வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென மிரட்டுவது உள்ளிட்ட அராஜக செயல்களில் ஈடுபட்டனர். ஆளும் கட்சி அரசு ஏழை எளிய மக்களுக்கு செய்யும் துரோகங்களை தெலுங்கு தேச கட்சி சார்பில் நாங்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று பொதுமக்களிடையே துண்டு பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.வரும் தேர்தலில் ஆளும் கட்சி அரசுக்கு பொதுமக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்து வருகின்றனர். வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராகி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் துயரங்களை தீர்த்து வைப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் சித்தூர் மண்டல தலைவர் மோகன்ராஜ், துணை தலைவர் மேஷாக், பொருளாளர் சோபன்பாபு உள்பட ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடையே துண்டு சீட்டு விநியோகம் செய்து பிரசாரம் செய்தனர்….

The post ஆந்திர மாநிலத்தில் மக்களுடன் சந்திப்பு ஆளும் கட்சி அரசுக்கு எதிராக வீடு, வீடாக துண்டு பிரசுரம் விநியோகம்-தெலுங்கு தேசம் கட்சியினர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Andhra State ,Telugu Nation Party ,Chittoor ,Khuva Kallu Arijana Wada ,Chittoor Zone ,AP ,Andhra ,Dinakaran ,
× RELATED அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் ஆந்திர வாலிபர் சுட்டுக்கொலை