×

ஜெய்ப்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2,300 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மி: பிரம்மிப்புடன் கண்டு களிக்கும் பொதுமக்கள்..!!

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2,300 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மியை, பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். பழமையான காலங்களில் அந்நாட்டை சேர்ந்த மன்னர்கள், முக்கியமானவர்கள் இறந்தவுடன் அவர்களது உடல்களை பதப்படுத்தி பிரமிடுகளில் புதைத்து வைப்பது அவர்களது வழக்கம். இறந்தவர்களின் உடலை பாதுகாக்‍கும் வகையில், எகிப்தியர்கள் பல்வேறு மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி, உடலை பதப்படுத்தி புதைத்து வந்துள்ளனர். இதனை அவர்கள் மம்மி என அழைக்கின்றனர். இந்நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 2,300 ஆண்டுகள் பழமையான டுடு-வின் மம்மி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்து நாட்டை சேர்ந்த நிபுணர்கள் குழுவால் இந்த மம்மி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அத்துடன், கலைநயமிக்க பொருள்கள், ஓவியங்கள், கம்பளங்கள், தந்தங்கள், உலோகச் சிற்பங்கள் படிக வேலைப்பாடுகள் என பல்வேறு வகையான அரிய பொருட்கள் இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மிகவும் பிரமிப்புடன் உள்ள இந்த மம்மி மற்றும் பல்வேறு கலைப்பொருட்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்….

The post ஜெய்ப்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2,300 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மி: பிரம்மிப்புடன் கண்டு களிக்கும் பொதுமக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Jaipur Museum ,Jaipur ,
× RELATED ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!!