×

தானே- திவா இடையே புதிதாக 2 ரயில் பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மும்பை: தானே-திவா இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 ரயில் பாதைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இரயில்வேயை நவீனமாகவும், பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் மாற்றுவது நமது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். இந்த காரணத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டிலிருந்து கோவிட் கூட நம்மைத் திசைதிருப்ப முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் சரக்கு போக்குவரத்தில் ரயில்வே புதிய சாதனை படைத்துள்ளது என பேசினார். மத்திய ரயில்வே வழித்தடத்தில் கல்யாண் முக்கியமான சந்திப்பு ரயில் நிலையமாக உள்ளது. இதில் கல்யாண்-சிஎஸ்எம்டி இடையே 4 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற 2 பாதையில் விரைவு மின்சார ரயில்களுடன், எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில், நீண்ட தூர ரயில்களால் மின்சார ரயில்களை தாமதமாக இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை சரிசெய்யும் வகையில் தானே-திவா இடையே ரூ.620 கோடி செலவில் கூடுதலாக 2 வழிப்பாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த திட்டத்தில் 1.4 கி.மீ. நீள ரயில்வே மேம்பாலம், 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரயில் பாதைகளை இன்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  இதன் மூலம் இப்பகுதி மக்களின் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வருகிறது….

The post தானே- திவா இடையே புதிதாக 2 ரயில் பாதை: பிரதமர் மோடி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Thane ,Diva ,Mumbai ,Thane-Diva ,train route ,Thane- Diva ,
× RELATED ரெமல் புயல் முன்னெச்சரிக்கை...