×

நியூசிலாந்தில் தென் ஆப்ரிக்காவுக்கு ‘டெஸ்ட்’

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து – தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று தொடங்குகிறது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் (பிப். 17-21 மற்றும் பிப். 25 – மார்ச் 1), கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூட்டிய அரங்கில் நடத்தப்படும். கேன் வில்லியம்சன் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், நியூசி. அணி லாதம் தலைமையில் களமிறங்குகிறது. கான்வே, டேரில் மிட்செல், வில்லியம் யங், மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா, டிம் சவுத்தீ, கைல் ஜேமிசன் ஆகியோர் தென் ஆப்ரிக்க அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறார்கள். அதே சமயம்… வில்லியம்சன், அஜாஸ், ராஸ் டெய்லர் (ஓய்வு) உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாதது டீன் எல்கர் தலைமையிலான தெ.ஆப்ரிக்க அணிக்கு சாதகமாக இருக்கும். பவுமா, வாண்டர் டசன், மகராஜ்,  என்ஜிடி, ரபாடா சிறப்பாக செயல்பட்டால் நியூசிலாந்தை ஓரளவு சமாளிக்கலாம். ஐசிசி டெஸ்ட் உலக கோப்பைக்கான புள்ளிகளை பெறுவதில் இரு அணிகளும் முனைப்புடன் உள்ளதால், கிறைஸ்ட்சர்ச்சில் இன்று அதிகாலை 3.30க்கு தொடங்கி நடைபெறும் முதல் டெஸ்டில் அனல் பறப்பது உறுதி.* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 டெஸ்டில் தெ. ஆப்ரிக்கா 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளன.* இதுவரை 45 டெஸ்டில் மோதியுள்ளதில் தெ. ஆப்ரிக்கா 25 – 4 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது (16 டெஸ்ட் டிரா).* தென் ஆப்ரிக்காவுடன் மோதிய 16 டெஸ்ட் தொடர்களில் ஒன்றைக் கூட நியூசி கைப்பற்றியதில்லை. 3 தொடர்களை டிரா செய்துள்ளது. எஞ்சிய 13 தொடர்களையும் தெ.ஆப்ரிக்கா வென்றுள்ளது….

The post நியூசிலாந்தில் தென் ஆப்ரிக்காவுக்கு ‘டெஸ்ட்’ appeared first on Dinakaran.

Tags : South Africa ,New Zealand ,Christchurch ,South ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...