×

இந்தியாவுடன் முதல் டி20 பூரன் அதிரடி அரை சதம்: அறிமுக சுழல் பிஷ்னோய் அசத்தல்

கொல்கத்தா: இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 61 ரன் விளாசினார்.ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் (21 வயது) அறிமுகமானார். பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்சை தொடங்கினர். கிங் 4 ரன் மட்டுமே எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் சூரியகுமாரிடம் பிடிபட்டார். அடுத்து மேயர்சுடன் அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தனர். மேயர்ஸ் 31 ரன் (24 பந்து, 7 பவுண்டரி) விளாசி சாஹல் சுழலில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் 4 ரன், ரோவ்மன் பாவெல் 2 ரன் எடுத்து பிஷ்னோய் பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் 10.5 ஓவரில் 74 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய பூரன் 38 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார். அகீல் உசேன் 10 ரன் எடுத்து சாஹர் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். இதையடுத்து பூரன் – கேப்டன் போலார்டு இணைந்து 5வது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.பூரன் 61 ரன் (43 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஹர்ஷல் பந்துவீச்சில் கோஹ்லி வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஓடியன் ஸ்மித் 4 ரன்னில் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன் குவித்தது. போலார்டு 24 ரன்னுடன் (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பிஷ்னோய், ஹர்ஷல் தலா 2, புவனேஷ்வர், சாஹர், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. …

The post இந்தியாவுடன் முதல் டி20 பூரன் அதிரடி அரை சதம்: அறிமுக சுழல் பிஷ்னோய் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : T20I ,India ,Bishnoi ,Kolkata ,Nicholas Pooran ,Pooran ,Bishnoi Asatal ,Dinakaran ,
× RELATED வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி