×

வாலாஜாபாத் பேரூராட்சி 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஏலச்சீட்டு நடத்தி 38 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார்

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் பேரூராட்சி அதிமுக வேட்பாளர், ஏலச்சீட்டு நடத்தி ₹38 லட்சம் மோசடி செய்ததாக, எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சி 2வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகன், ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த எபிநேசர் என்பவர் எஸ்பி சுதாகரிடம் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது.வாலாஜாபாத், மெக்ளின்புரத்தை சேர்ந்த மோகன் (எ) சீட்டு மோகன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர், கடந்த 2011ம் ஆண்டு ஏலச்சீட்டில் சேரும்படி என்னிடம் கேட்டனர். நான் விருப்பமில்லை என தெரிவித்தும் தொடர்ந்து வற்புறுத்தி சீட்டில் சேர்த்தனர்.அதன்படி கடந்த 2011 முதல் 2020ம் ஆண்டுவரை ₹1 லட்சம், ₹2 லட்சம், ₹4 லட்சம் என மொத்தம் 37 சீட்டு கட்டி உள்ளேன். அதில், 2018ம் ஆண்டு முதல் 2020 ஆண்டுவரை ₹1 லட்சம் சீட்டில் 24, ₹2 லட்சம் சீட்டில் 3, ₹4 லட்சம் சீட்டில் 2 என மொத்தம் ₹38 லட்சம் எனக்கு, மோகன் தரவேண்டியுள்ளது. இதுபற்றி மோகன் மற்றும் அவரது மனைவியிடம் கேட்கும்போது சீட்டு பணம் வசூல் ஆகவில்லை. வந்தவுடன் கொடுத்து விடுகிறேன் என கூறினர். ஆனால் இதுவரை பணத்தை தரவில்லை.இதையடுத்து, கடந்த ஆண்டு ஜனவரியில் மோகன், அவரது மனைவி மகேஸ்வரியை நேரில் சந்தித்து கேட்டபோது, பணம் கொடுக்க முடியாது, உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என மிரட்டினார்கள். இதுதொடர்பாக, கடந்த ஆண்டு நவம்பரில் மோகன் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி மீது பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தேன்.புகாரின்பேரில் விசாரணைக்கு வந்த மோகன், பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டு சென்றார். ஆனால் பணத்தை இதுவரை தரவில்லை.இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாலாஜாபாத் பேரூராட்சியில் 2வது வார்டு வேட்பாளராக அதிமுக சார்பில் மோகன் போட்டியிடுகிறார். அவர் வாக்கு சேகரிக்க வரும்போது, கட்சியினரை வைத்து எனது புகார் மனுவை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டுகிறார்.எனவே, பணமோசடி செய்து, எனக்கு மிரட்டல் விடுக்கும் மோகன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது….

The post வாலாஜாபாத் பேரூராட்சி 2வது வார்டில் அதிமுக வேட்பாளர் ஏலச்சீட்டு நடத்தி 38 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : WALLAJABAT PARTY ,WARD ,Kanchipuram ,Walajabad Party ,SP ,Kanchipuram District ,Vallajabad Municipality ,2nd Ward ,Dinakaran ,
× RELATED மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள...