×

ஜான்வி கபூரை தமிழுக்கு கொண்டு வரும் கமல்ஹாசன்?

நடிகர் கமல்ஹாசன், ‘விக்ரம் ‘படத்தின் வெற்றிக்கு பின், நடிகராக பிஸியானது போல் தயாரிப்பாளராகவும் பிஸியாக உள்ளார். தற்போது சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் டுடே’ நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரதீப்க்கு ஜோடியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் மற்றும் நடிகை ஜான்வி கபூரை தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த கமல் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூர் இப்போது ஹிந்தி படங்களை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஜான்வி கபூரை தமிழுக்கு கொண்டு வரும் கமல்ஹாசன்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal Haasan ,Janhvi Kapoor ,Sivakarthikeyan ,Simbu ,Vignesh Sivan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல!: மழை,...