×

வினோத் இயக்கத்தில் கமல்

ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ள கமல்ஹாசன், அடுத்து நாக் அஸ்வின் இயக்கும் ‘புராஜெக்ட் கே’ படத்தில் நடிக்கிறார். இதில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ₹150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் நடிக்கும் 233வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, கமல்ஹாசனின் ‘கேஎச்233’ என்ற தற்காலிக பெயர் கொண்ட படத்தை ஹெச்.வினோத் எழுதி இயக்குகிறார்.

இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இந்நிலையில், ெஹச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் குறுகியகால தயாரிப்பாக உருவாகிறது. இதுகுறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

The post வினோத் இயக்கத்தில் கமல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal ,Vinod ,Kamal Haasan ,Shankar ,Nag Ashwin ,Prabhas ,Deepika Padukone ,Amitabh Bachchan ,Disha Patani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த...