×

மாசாணியம்மன் கோயிலில் மயானக்கொள்ளை சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஓசூர்: ஓசூரில் மாசாணியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த மயான கொள்ளை பூஜையில், பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் 5ம் ஆண்டு மயான கொள்ளை மற்றும் குண்டம் திருவிழா நடைபெற்றது. கடந்த 1ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய இந்த திருவிழாவில், நேற்று முன்தினம் பக்தர்கள் பால்குடம் மற்றும் பூங்கரகங்கள் எடுத்து சென்று அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமத்தால் அபிஷேகம் செய்தனர். அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து பம்பை, உடுக்கை மேளதாளங்களுடன் குறிசொல்லி ஆடும் ஆட்டம் நடைபெற்றது. இதில், பூசாரி சுடுகாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட எலும்பை வாயில் கடித்தபடி அருள்வந்து ஆடினார். தொடர்ந்து, மாசாணியம்மன் சிலையை மேளதாளங்களுடன் சுற்றி வந்த பூசாரி, சூலாயுதத்தால் அம்மனின் சிலையை குத்தி உடைத்தார். அதன்பின்னர் சிலையின் மேலிருந்த எலுமிச்சை பழம், மஞ்சள் கயிறுகள், மண் உள்ளிட்ட பொருட்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில், பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்வாறு செய்தால் பேய் பிடித்திருந்தால் விலகி விடும் என்பது ஐதீகமாக உள்ளது….

The post மாசாணியம்மன் கோயிலில் மயானக்கொள்ளை சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Mayanakkolla ,Masaniyamman Temple ,Osur ,Maasanyamman Temple ,Krishnagiri ,Maasaniyamman Temple ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த...