×
Saravana Stores

இலங்கை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இருநாட்டு பக்தர்களுக்கும் அனுமதி இல்லை

இலங்கை: கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தமிழக யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதற்கமைய, அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 500 பக்தர்களை அனுமதிப்பதாக யாழ் மாவட்ட ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும், இம்முறை யாத்திரிகர்களை அனுமதிப்பதில்லை எனவும் அருட்தந்தைகளின் பங்கேற்புடன் மாத்திரம் திருவிழாவை நடத்தத் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்று கூறினார்….

The post இலங்கை கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க இருநாட்டு பக்தர்களுக்கும் அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Kachathivu Anthony temple festival ,Sri Lanka ,Tamil Nadu ,Kachchathivu festival ,Minister ,Fisheries ,Douglas ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை