×

சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் கத்தி முனையில் ரூ.3 லட்சம் பறிப்பு

தண்டையார்பேட்டை: மண்ணடி மலையப்பன் தெருவை சேர்ந்த ஜியாவுதீன் (30), அங்கப்ப நாயக்கன் தெருவில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வசூல் பணம்  ரூ.3 லட்சத்தை  ஒரு பையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். மலையப்பன் தெருவில் சென்றபோது, அங்கு வந்த 4 பேர், அவரை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து,  முத்தியால்பேட்டை போலீசில் ஜியாவுதீன் புகார் அளித்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  …

The post சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் கத்தி முனையில் ரூ.3 லட்சம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Pandadarpet ,Jiawudeen ,Mandi Layayappan Street ,Ankapa Nayakkan Street ,Dinakaran ,
× RELATED கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ...