×

கவுதம் மேனன் இயக்கத்தில் வடிவேலு

சென்னை: கவுதம் மேனன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் வடிவேலு. மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால், எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கவுதம் மேனன். அவர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து வடிவேலுவை வைத்து காமெடி கதை ஒன்றை படமாக்க யோசித்துள்ளார். ‘காதல், ஆக்‌ஷன் கதைகள் நிறைய எடுத்துவிட்டேன். முழுநீள காமெடி படம் ஒன்றை உருவாக்க விரும்புகிறேன். இதில் ஹீரோவாக நடிக்க வடிவேலுவிடம் பேசி வருகிறேன். அனைத்து விஷயங்களும் சரியாக அமைந்தால் இந்த படம் விரைவில் தொடங்கப்படும்’ என கவுதம் மேனன் கூறினார். தற்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார்….

The post கவுதம் மேனன் இயக்கத்தில் வடிவேலு appeared first on Dinakaran.

Tags : vativelu ,gautam menon ,chennai ,Gautam Manon ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...