×

வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வருவாய்த்துறை உதவியாளருக்கு சிறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் நகலூரை சேர்ந்தவர் கருப்பணன் (60). இவர் கடந்த 2016 செப்டம்பர் 23ம் தேதி அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதற்காக வருவாய்த்துறை உதவியாளர், ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஜெயராஜ் (40), அலுவலக உதவியாளரான நகலூரை சேர்ந்த செல்வராஜ் (57) ஆகியோர் ரூ.4,500 லஞ்சம் பெற்றபோது ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை ஈரோடு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி விசாரித்தார். இதற்கிடையில் செல்வராஜ் 2020ல் உயிரிழந்தார். இதையடுத்து, ஜெயராஜுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும்,  ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். …

The post வாரிசு சான்றுக்கு ரூ.4,500 லஞ்சம் வருவாய்த்துறை உதவியாளருக்கு சிறை appeared first on Dinakaran.

Tags : Erode ,Karuppanan ,Andiyur ,Nagalur ,Erode district ,Andhiyur ,Dinakaran ,
× RELATED ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரிகளில்...