×

மின்சார ரயிலில் தனியாக பயணித்த இளம்பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய வாலிபரால் பரபரப்பு: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா (27). பிரபல யூடியுப் சேனலில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 9ம் தேதி இரவு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வந்த மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் தனியாக பயணம் செய்துள்ளார். மீனம்பாக்கம் ரயில் நிலையம் வந்தபோது, ரேணுகா பயணம் செய்த பெட்டியில் ஏறிய மர்ம நபர், சிறிது நேரம் கழித்து தனது ஆடையை கழட்டி, ஆபாச சைகை செய்தவாறு, அநாகரீகமாக நடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த ரேணுகா கூச்சலிட்டுள்ளார். மேலும், அந்த மர்ம நபரை தனது செல்போனிலும் வீடியோ எடுத்தார். செல்போனில் படம் பிடிப்பதை பார்த்ததும் அந்த நபர், குரோம்பேட்டை ரயில் நிலையம் வந்ததும் கீழே குதித்து, தப்பி ஓட்டம் பிடித்தார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலர் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுதொடர்பாக, தாம்பரம் ரயில்வே போலீசார் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், மீனம்பாக்கம், பாண்டி தெருவை சேர்ந்த லட்சுமணன் (23) என்பவர், ஆபாச சைகை காட்டி, அநாகரீகமாக நடந்துகொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்….

The post மின்சார ரயிலில் தனியாக பயணித்த இளம்பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய வாலிபரால் பரபரப்பு: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : UD ,
× RELATED சென்னையில் உபா சட்டத்தின் கீழ் கைதானவரிடம் போலீஸ் விசாரணை..!!