×

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையை கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்து தண்ணீர்
திறந்துவிடுவதும், அணையை ஆய்வு செய்வதும், மதகுகளின் கதவுகளை
மேற்பார்வையிடுவதையும் தமிழ்நாடு அரசு கண்டு காணாமல் இருக்கிறது.கேரள
அரசின் இதுபோன்ற தன்னிச்சையான நடவடிக்கை முளையிலேயே கிள்ளி எறியப்பட
வேண்டும் என்பதும், கேரள அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டும் காணாமல்
இருப்பது பின்னாளில் கேரள அரசு உரிமை கோர வழிவகுத்துவிடும் என்பதும்,
முல்லைப் பெரியாறு அணையின் ஒரே உரிமையாளர் தமிழ்நாடு தான் என்பது
நிலைநிறுத்தப்பட வேண்டும். எனவே, முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட
நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் கேரள
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து செல்வது தடுத்து
நிறுத்தப்பட வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன். …

The post முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mullapiperiyarai dam ,OPS ,Chennai ,Indirect Coordinator ,O. Pannerselvam ,Kerala ,Mullam Periyaru dam ,Mullapiriyarai Dam TN ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...