×

உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை அரசு டாக்டர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான 13,650 ரூபாய் போன்றே, தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட வேண்டும். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த கட்டண நிர்ணய ஆணையை ஒன்றிய, மாநில அரசுகள் வெளியிட்டால் தான், தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்கள் சேரமுடியும். அதே போன்று, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டு என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, நடப்பாண்டிலேயே அமல்படுத்த ஒன்றிய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் உள்ள 100 சதவீதம், உயர்சிறப்பு மருத்துவ இடங்களையும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தமிழ்நாடு உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணங்களை கண்காணிப்பதற்கு, பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார். …

The post உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை அரசு டாக்டர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: வேல்முருகன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Welmurugan ,Chennai ,Tamil Nadu Livelihood Party ,Velmurugan ,Government of Tamil Nadu ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...