×

அதிமுக வேட்பாளர் கீதாவை ஆதரித்து ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 60வது வார்டில் அதிமுக, தமாகா கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தமாகா மாவட்ட தலைவர் வி.என்.வேணுகோபாலின் மனைவி வே.கீதாவை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் தாம்பரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பகுதி வளர்ச்சியடைய கீதா வேணுகோபாலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்,’’ என்றார்.செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, அதிமுக நகர செயலாளர் கூத்தன், அதிமுக நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், பூபதி, காத்தவராயன், மூர்த்தி, வினோத், வெற்றி, தனம், சித்ரா, நாராயணசாமி, வெங்கடேசன், ராஜு, சரவணன், விக்கி, ஐயப்பன், தமாகா நிர்வாகிகள் ஜெயராமன், கே.எஸ்.பி.லோக சுப்பிரமணியம், ஆர்.பி.எஸ்.பொன்ராஜ், துரைவேலு முதலியார், இ.மணி, சீதாராமன், மோகனகிருஷ்ணன், சி.கே.மூர்த்தி, சுகுணா மணி, கந்தசாமி, விஜய் ஆனந்த், ரேகா மகேந்திர வர்மா, வசந்த், சங்கர், மணல் கண்ணன், பாபு, ஜெகதீஸ், சிவபிரகாஷ், பெஞ்சமின், கர்ணன், பாலமுருகன், லட்சுமணன், உமாபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். …

The post அதிமுக வேட்பாளர் கீதாவை ஆதரித்து ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : GK ,Vasan ,AIADMK ,Geetha ,Tambaram ,Thamaka District ,60th Ward ,Tambaram Municipal Corporation ,Thamaka Alliance ,Dinakaran ,
× RELATED நியாய விலை கடைகளின் மூலம்...