×

உரிய அனுமதி பெறாமல் சென்னையில் போராட்டம் பாஜ மாணவ அமைப்பினர் 29 பேர் சிறையில் அடைப்பு: 4 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் போராட்டம் நடத்திய ஏபிவிபி பொதுச் செயலாளர் நிதி திரிபாதி உட்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாணவி லாவண்யா சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதி கேட்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் நிதி திரிபாதி தலைமையில் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், அரி கிருஷ்ணா உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டின் அருகே நேற்று முன்தினம் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.அவர்களை, போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசாரின் தடையை மீறி அவர்கள் சாலையில் படுத்து முழக்கம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிதி திரிபாதி உட்பட அனைவரையும் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது. அதைதொடர்ந்து போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பின் பொதுச் செயலாளர் நிதி திரிபாதி, நிர்வாகிகளான முத்துராமலிங்கம், அரிகிருஷ்ணா உட்பட 29 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 3 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களை கடுமையாக எச்சரித்து கடிதம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்….

The post உரிய அனுமதி பெறாமல் சென்னையில் போராட்டம் பாஜ மாணவ அமைப்பினர் 29 பேர் சிறையில் அடைப்பு: 4 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,BJP ,ABVP general secretary ,Niti Tripathi ,Chennai.… ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...