×

உக்ரைன் எல்லையில் மேற்கொண்டு முன்னேறினால் ரஷியா நீண்ட கால இழப்புகளை சந்திக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் ஜோபிடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் மேற்கொண்டு முன்னேறினால் பொருளாதார கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்துள்ளார். ஆனால் ஐரோப்பாவில் மீண்டும் ஓர் போர் மூழ்வதை ரஷியா விரும்பவில்லை என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.உக்ரைன் – ரஷியா இடையிலான போர் பதற்றம் உச்சகட்ட நிலையை அடைந்து வரும் சூழலில், ரஷியா மேற்கொண்டு முன்னேறினால் சர்வதேச அளவில் எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்காவும் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம் என்று கூறியுள்ள ஜோபிடன், ரஷியாவின் மிக முக்கியமான நிதி அமைப்புகள், முக்கிய துறைகளுக்கு அழுத்தம் கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.ரஷிய படைகளின் லட்சக்கணக்கான துருப்புகள் இன்னும் உக்ரைன் எல்லையில் இருப்பதால் நேட்டோ படைகளின் பயிற்சியும் தொடரும் என்றும் ஜோபிடன் தெரிவித்துள்ளார். ரஷியா படைகளை திரும்பப் பெற்றால் அடுத்த கட்டம் குறித்து ஆலோசிப்போம் என்றும் பிடன் கூறியுள்ளார்.இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய அதிபர் புதின், ஐரோப்பாவில் மீண்டும் ஒரு போரை ரஷியா விரும்பவில்லை. ஆனால் நேட்டோ, உக்ரைன் உறவு பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நேட்டோ ராணுவ கூட்டணியில் உக்ரைன் சேராது என்று மேற்கத்திய நாடுகள் கூறுவது ரஷியாவுக்கு உத்தரவாதமான பதிலாக இல்லை என்றும் புதின் கூறியுள்ளார். போரை விரும்புகிறோமா இல்லையா என்றால் நிச்சயம் இல்லை, அதனால் தான் பேச்சுவார்த்தைக்கான செயல் முறைகளை முன் வைக்கிறோம் என்றும் புதின் விளக்கம் அளித்துள்ளார்….

The post உக்ரைன் எல்லையில் மேற்கொண்டு முன்னேறினால் ரஷியா நீண்ட கால இழப்புகளை சந்திக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் ஜோபிடன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine border ,US ,President Joe Biden ,Washington ,President ,Joe Biden ,Ukraine ,US President Joe Biden ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...