×

சட்டவிரோதமாக வீட்டில் தயாரித்தபோது பயங்கரம் பட்டாசு வெடித்து வாலிபர் சிதறி பலி

* தாய், குழந்தை படுகாயம்; 10 வீடுகள் சேதம் * உரிமையாளர் மாயம்; உசிலை அருகே பரபரப்புஉசிலம்பட்டி : வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த போது, வெடித்து சிதறியதில் மாற்றுத்திறன் வாலிபர் உடல் சிதறி பலியானார். மேலும் தாய், 6 மாத பெண் குழந்தையும் விபத்தில் படுகாயமடைந்தனர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் (35). சிவகாசியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் மேல் மாடியில் ஆட்களை வைத்து சட்டவிரோதமாக பட்டாசுகளுடன், விசேஷ வீடுகளுக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகளையும் தயாரித்து வந்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில் மாற்றுத்திறனாளியான செக்கானூரணியை சேர்ந்த அஜித் (27) பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் மாடி இடிந்து விழுந்தது. இதில் ஊழியர் அஜித் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். வெடி விபத்தில் பிரவீன் வீட்டிற்கு கீழ் வீட்டில் குடியிருந்த விபிதா (22), இவரது 6 மாத குழந்தை ஹர்ஷிதா இருவரும் பலத்த காயமடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கம் தலைமையிலான வீரர்கள், இடிபாடுகளில் சிக்கிய தாய், குழந்தையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுமார் 100 மீட்டர் பகுதி வரை சிதறிக் கிடந்த அஜித்தின் தலை, கை உள்ளிட்ட உடல் பாகங்களை போலீசார் சேகரித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு, இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.விபத்தில், அருகே குடியிருந்த ஆசிரியர் சுந்தர்ராஜன் என்பவரது வீட்டின் மாடிப்பகுதி சேதமடைந்தது. 10க்கும் மேற்பட்ட வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பலியான அஜித் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் பிரவீனிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.  முறையாக வெடிமருந்தினை கையாளத் தெரியாததால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. விபத்தை தொடர்ந்து தலைமறைவான பிரவீனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வெடிவிபத்து தொடர்பாக மதுரை எஸ்பி பாஸ்கரன், அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.எஸ்பி பாஸ்கரன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘சட்டவிரோதமாக வீட்டில் இருந்த வெடி வெடித்துள்ளது. விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. வெடித்தவை விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததா, இங்கேயே தயாரிக்கப்பட்டதா எனவும் விசாரித்து வருகிறோம். மாவட்டம் முழுவதும் கிராமப்பகுதிகளில் ஆய்வு செய்து சட்டவிரோத வெடிகள், பட்டாசு தயாரிப்புகள், விற்பனை இருக்கிறதா என்பதை கண்டறிந்து இதில் ஈடுபட்டிருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.அனுமதியின்றி பட்டாசு தயாரித்த இருவர் கைதுசிவகாசி: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கீழதாயில்பட்டி, கோட்டையூர் கிராமங்களில் சிலர் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து வெம்பக்கோட்டை எஸ்ஐ வெற்றிமுருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் கீழதாயில்பட்டியை சேர்ந்த மாதவன், ேகாட்டையூரை சேர்ந்த முனீஸ்வரன் ஆகியோரது வீடுகளில் அனுமதியின்றி வெடி தயாரித்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 40 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தனர்….

The post சட்டவிரோதமாக வீட்டில் தயாரித்தபோது பயங்கரம் பட்டாசு வெடித்து வாலிபர் சிதறி பலி appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Usilai ,Dinakaran ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...