×

பிரபாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ‘சலார்’ படத்தின் டீசர் குறித்தான செய்தி வெளியானது

‘கேஜிஎஃப்’ படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ப்ரிதிவிராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் வரும் செப். 28ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படம் ‘கேஜிஎஃப்’ யுனிவர்ஸின் ஓர் அங்கமாக இருக்கலாம் எனவும் இப்படத்தில் நடிகர் யாஷ், விஜய்சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர் எனவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இப்படத்தின் டீசர் வரும் 6-ஆம் தேதி அதிகாலை 5.12 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘கேஜிஎஃப் 2’ பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

The post பிரபாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ‘சலார்’ படத்தின் டீசர் குறித்தான செய்தி வெளியானது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhas ,Prashant Neel ,Prithviraj ,Shruti Haasan ,Jagapathi Babu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிரபாஸ் சல்மானுக்கு பிறகே எனக்கு...