×

பிரீமியர் லீக் கால்பந்து : பிரைட்டனை வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்

ஓல்டு டிராஃபோர்ட்: ஓல்டு டிராஃபோர்டில் (இங்கிலாந்து) இன்று அதிகாலை நடந்த பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் பிரைட்டன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியது. உலகின் நம்பர் 1 கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இப்போட்டியில் அட்டகாசமாக ஒரு கோல் அடித்து, இந்த ஆண்டில் தனது கோல் கணக்கை துவக்கினார். ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் இதுவரை பிரைட்டன் அணி வெற்றி பெற்றதில்லை என்ற போதிலும், இப்போட்டியில் முதல் பாதியில் அந்த அணியின் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்களை திணறடித்தனர். வரலாற்றை எப்படியாவது மாற்றி விட வேண்டும் என்ற துடிப்புடன் முதல் பாதியில் ஆடிய அவர்கள், 2ம் பாதியில் கோட்டை விட்டு விட்டனர்.ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் சகவீரர் கொடுத்த பந்தை திறமையாக கடத்தி சென்ற மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அட்டகாசமாக ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். இந்த கோல் மூலம் அவர், இந்த ஆண்டில் தனது கோல் கணக்கை துவக்கியுள்ளார். தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் மான்செஸ்டர் அணியின் முன்கள வீரர் புருனோ பெர்னாண்டசும் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் இப்போட்டியில் மான்செஸ்டர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது….

The post பிரீமியர் லீக் கால்பந்து : பிரைட்டனை வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட் appeared first on Dinakaran.

Tags : Premier League football ,Brighton ,Manchester United ,Old Trafford ,Premier League ,England ,Dinakaraan ,
× RELATED சாம்பியன்ஸ் லீக் கால்பந்து...