×

பிரசவமான மனைவியை பார்க்க வந்து தகராறு: மருத்துவமனை கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி

நாட்றம்பள்ளி: மனைவிக்கு குழந்தை பிறந்ததை பார்க்க வந்தவர், செவிலியர்களை ஆபாசமாக பேசி, மருத்துவமனையின் கண்ணாடிகளை உடைத்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் அரசு சமுதாய சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதந்தோறும் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருகின்றனர். 24 மணிநேரம் பிரசவ வார்டு செயல்பட்டு வருகிறது. தினசரி குழந்தை பிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மனைவி சவுமியாக்கு(19) பிரசவம் நடந்தது. இதில், அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையறிந்த ஜெயராஜ் நேற்றிரவு சமுதாய சுகாதார நிலையத்திற்கு மதுபோதையில் வந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அவரது மனைவியை ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். அவர்களையும் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. மேலும் ஆத்திரமடைந்த ஜெயராஜ், மருத்துவமனையின் கண்ணாடி கதவை அடித்து உடைத்துள்ளார். அதில், செவிலியர்கள் காயமடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் நாட்றம்பள்ளி போலீசார், சம்பவ இடம் சென்று ஜெயராஜை பிடித்து விசாரித்து வருகின்றனர்….

The post பிரசவமான மனைவியை பார்க்க வந்து தகராறு: மருத்துவமனை கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி appeared first on Dinakaran.

Tags : Asami ,Nadramballi ,
× RELATED திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும்...