×

‘மாவீரன்’ படத்தையடுத்து ஸ்டைலீஷான கேரக்டரில் நடிக்கும் அதிதி!

பிரம்மாண்ட இயக்குனரின் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்த அதிதி, இயக்குனர் முத்தையா இயக்கிய ‘விருமன்’ படத்தில், நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்தார். இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் வரும் 14ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி நடிக்க உள்ளார். இப்படத்தில் மிகவும் ஸ்டைலீஷான கெட்டப்பில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பாடல், ஆக்சன் காட்சிகளை படமாக்க படக்குழு வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளது. அதனால் பாடல் காட்சியில் நடிப்பதற்காக அதிதியும்ம் வெளிநாடு செல்ல உள்ளார்.

The post ‘மாவீரன்’ படத்தையடுத்து ஸ்டைலீஷான கேரக்டரில் நடிக்கும் அதிதி! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aditi ,Maveeran ,Shankar ,Karthi ,Muthiah ,Sivakarthikeyan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அதிதியுடன் திருமணம் எப்போது? சித்தார்த் பதில்