×

பாலக்காட்டில் பரபரப்பு செராடு மலையில் மீண்டும் வாலிபர்கள் சாகச பயணம்: ஒருவர் சிக்கினார்; மற்றவர்கள் மாயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அருகே செராடு பகுதியை சேர்ந்தவர் பாபு (23). கடந்த வாரம் செங்குத்தான செராடு கும்பாச்சி மலைக்கு சாகசப்  பயணம் சென்ற போது கால் வழுக்கி கீழே விழுந்தார். செங்குத்தான பகுதியில் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டார். 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராணுவம் பாபுவை மீட்டது. பின்னர் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, 3 நாள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செராடு கும்பாச்சி மலைப்பகுதியில் வெளிச்சம் தென்படுவதை அந்த பகுதியினர் பார்த்து, போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது மலையேற  முயன்ற ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் ஆனக்கல் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் நடந்த விசாரணையில் மேலும் சிலர் மலையில் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி  வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த வனத்துறை அமைச்சர் சசீந்திரன், ‘‘இனி அனுமதி இல்லாமல் மலை ஏறினால் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். பாபுவுக்கு வழங்கப்பட்ட சலுகை அனைவருக்கும் வழங்க முடியாது’’ என்றார்.* மீட்கப்பட்டவர் மீது வழக்குப்பதிவுஇதற்கிடையே மலை இடுக்கில் சிக்கி ராணுவத்தால் மீட்கப்பட்ட வாலிபர் பாபு உட்பட 4 பேர் மீதும் வனத்துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் வரை சிறையோ 25 ஆயிரம் அபராதமோ விதிக்கப்படும்….

The post பாலக்காட்டில் பரபரப்பு செராடு மலையில் மீண்டும் வாலிபர்கள் சாகச பயணம்: ஒருவர் சிக்கினார்; மற்றவர்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Walifers ,Palakkad ,Seradu mountain ,Thiruvananthapuram ,Seradu ,Malambuzha, Palakad District, Kerala ,Palakkat Stirring ,Seradh ,Dinakaran ,