×

எல்லையில் 1.30 லட்சம் ரஷ்ய படை குவிப்பு உக்ரைன் மீது ஓரிரு நாளில் தாக்குதல்? அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு தகவல்

வாஷிங்டன்: ரஷ்யா உக்ரைன் மீது அடுத்த ஓரிரு நாளில் படையெடுக்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் வீரர்கள், ஆயுதங்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி வருகின்றன. உக்ரைன் எல்லையையொட்டிய தனது எல்லைப் பகுதியான பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் ஏறக்குறைய 1 லட்சம் வீரர்களை நிறுத்தி இருந்த ரஷ்யா தற்போது அந்த எண்ணிக்கையை 1.30 லட்சமாக உயர்த்தி உள்ளது.இதனிடையே, புடினை தொடர்பு கொண்ட பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, தற்போது உக்ரைன் மீது அடுத்த ஓரிரு நாளில், குறிப்பாக நாளையே கூட படையெடுக்க ரஷ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா கீவ் உள்ளிட்ட உக்ரைன் நகரங்களில் உள்ள தூதரக அதிகாரிகள், அமெரிக்கர்கள் வெளியேறும்படி கேட்டுக் கொண்டது. ரஷ்யா படைகளும் உக்ரைனின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு எல்லைப் பகுதிகளில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி போர் தொடுக்கும் பட்சத்தில், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா, நேட்டோ படைகளும் தயாராக உள்ளன. இதனால், 3ம் உலகப் போர் மூளும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனிடையே, நேற்று கீவ் சென்ற ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கொல்ஸ் இன்று மாஸ்கோ சென்று அதிபர் புடினை சந்தித்து போரை நிறுத்தும்படி ஆலோசனை நடத்த உள்ளார்.* உக்ரைன் வேண்டுகோள்உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தனது பேஸ்புக் பதிவில், “ரஷ்யா மற்றும் அனைத்து உறுப்பினர் நாடுகளுடன் அடுத்த 48 மணி நேரத்தில் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதில், 1990ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி, முக்கிய ராணுவ நடவடிக்கை, செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு நாடும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ள 57 நாடுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை ரஷ்யா பின்பற்றவில்லை. அதை மீறி, எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட படையினர், ஆயுதங்களை குவித்துள்ளது,’’ என்று குற்றம் சாட்டியுள்ளார். …

The post எல்லையில் 1.30 லட்சம் ரஷ்ய படை குவிப்பு உக்ரைன் மீது ஓரிரு நாளில் தாக்குதல்? அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,WASHINGTON ,Russia ,US intelligence ,F. GP GI ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...