×

கன்னட நடிகர் கவலைக்கிடம்

பெங்களூரு: கன்னட நடிகர் ராஜேஷ், கவலைக்கிடமான நிலையில் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த கன்னட நடிகர் ராஜேஷ் (82). கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘சிறுநீரக செயலிழப்பு மற்றும் வயது முதிர்வு தொடர்பான நோய்களால் ராஜேஷ் அவதிப்பட்டு வந்தார். அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதால் பெங்களூரு கஸ்தூர்பா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வென்டிலேட்டர் மூலம் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது’ என்று கூறின. பெங்களூருவில் பிறந்த ராஜேஷின் நிஜப் பெயர் முனி சவுடப்பா. திரையுலகில் தலதபஸ்வி ராஜேஷ் என்ற பெயரில் பிரபலமானார். கடந்த 1960ம் ஆண்டு திரைப்படத்துறையில் நுழைந்த அவர், நூற்றுக்கணக்கான கன்னட படங்களில் நடித்துள்ளார்….

The post கன்னட நடிகர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Rajesh ,Bengaluru ,Karnataka ,
× RELATED பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல்...