×

மணக்கோலத்தில் மனைவியுடன் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சேலம்: சேலம் மாநகராட்சியின் 14வது வார்டில், திமுக சார்பில் சாந்தமூர்த்தி போட்டியிடுகிறார். அவருக்கும் ஜங்சன் பகுதியைச் சேர்ந்த கலையரசி என்பவருக்கும், நேற்று ஏற்காடு அடிவாரத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது. மணக்கோலத்தில் வீட்டிற்கு வந்த சாந்தமூர்த்தி, சிறிது நேரத்திலேயே தனது புது மனைவி கலையரசியுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, 14வது வார்டுக்கு உட்பட்ட வின்சென்ட், குமாரசாமிபட்டி, அங்கம்மாள் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று, வாக்கு கேட்டார். அவருடன் சென்ற புதுப்பெண் கலையரசியும், தனது கணவருக்கு ஆதரவாக  வாக்களிக்குமாறு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்ததுடன், மணமக்களுக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்….

The post மணக்கோலத்தில் மனைவியுடன் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Manakolam ,Salem ,Salem Corporation ,Shanthamurthy ,DMK ,Kalaiyarasi ,Jungsan ,Dinakaran ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவிக்கு HCL-ல் பணி..!!