×

திருப்பூரில் தேர்தல் பிரசாரம் எடப்பாடி பேசிய மேடையில் ஏறிய போதை வாலிபரால் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று மாலை தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ”உள்ளாட்சி அமைப்பு என்பது மக்களோடு நேரடி தொடர்புடையது. மாநகராட்சியில் உள்ள எம்எல்ஏவை விட, மேயருக்கு அதிகாரம் அதிகம். அதிகாரம் படைத்த பதவியை நாம் வென்றெடுக்க வேண்டும் என்றார். எடப்பாடிக்கு மேடையில் பலரும் சால்வைகள் அணிவித்தும், மலர்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். அப்போது திடீரென ஒரு வாலிபர் மதுபோதையில் மேடையில் ஏறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாலிபரை  கட்சியினர் கீழே அழைத்து சென்றனர்….

The post திருப்பூரில் தேர்தல் பிரசாரம் எடப்பாடி பேசிய மேடையில் ஏறிய போதை வாலிபரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,AIADMK ,Chandrapuram ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்