×

தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து 75 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல்

சென்னை : தமிழகத்தில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு வேலைக்காக காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள், மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் (சென்னை மற்றும் மதுரை)இயங்கி வருகின்றன. இவற்றில்பதிவு செய்பவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வர வேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடைமுறையில் இருக்கும்.அப்படி தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75,88,159 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், ஆண்கள் 35,56,087  பேரும்,  பெண்கள் 40,32,046 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள்  228 பேரும் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்கள் தற்போது  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17.81 லட்சம்  பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16.14 லட்சம் பேரும், 24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலை நாடுநர்கள் 28,60,359 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயது முதல் 57 வயது வரை விடுபட்ட பதிவுதாரர்கள் 13,20,337 பேர், 58 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 11,386  பேர் என தெரிவித்துள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளிகள் வேலைக்காக 1.38 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்….

The post தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து 75 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Department ,Chennai ,Employment Training Department ,
× RELATED ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை...