×

ரைஸ் குக்கர், உள்ளாடையில் தங்கம் கடத்தல்; 2பேர் கைது: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

மீனம்பாக்கம்: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ரைஸ் குக்கர், உள்ளாடையில் கடத்திவரப்பட்ட தங்க கட்டிகளை பறிமுதல் செய்து இரண்டு பயணிகளை கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் சிறப்பு  விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி அனுப்பினர். ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு ஆண் பயணி ஒருவர், எலக்ட்ரிக் ரைஸ் குக்கரை துபாயில் இருந்து வாங்கி வந்திருந்தார். குக்கர் மீதும் பயணி மீதும் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்ததால் அவரை நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரது ரைஸ் குக்கரை திறந்து பார்த்தபோது  அதன் உள்ளே வட்டவடிவில் தங்ககட்டி  மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 300 எடை கொண்ட தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.13.70 லட்சம். இதையடுத்து பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியபோது சென்னையை சேர்ந்த ஆண் பயணி தனது உள்ளாடைக்குள் 290 கிராம் தங்க பசையை மறைத்துவைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் இருந்து ரூ.13.5 லட்சம் மதிப்பு தங்கத்தை கைப்பற்றினர். இதனிடையே சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம் அருகே உள்ள 2 குப்பை தொட்டிகளை விமானநிலைய தூய்மை பணியாளர்கள் சுத்தப்படுத்தியபோது குப்பை தொட்டிகளுக்குள் இருந்து இரண்டு பார்சல்களை எடுத்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது தங்கப் பசை இருந்தது.  இரண்டு பார்சல்களில் இருந்து சுமார் 42 லட்சம் மதிப்புள்ள 960 கிராம் தங்கப்பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை விமான நிலைய குப்பை தொட்டியில் மறைத்துவைத்துவிட்டு தப்பிய கும்பலை கண்காணிப்பு கேமரா மூலம்  போலீசார் தேடி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து ரூ.70 லட்சம் மதிப்புக்கொண்ட 1.55 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு பயணிகள் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது….

The post ரைஸ் குக்கர், உள்ளாடையில் தங்கம் கடத்தல்; 2பேர் கைது: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Airboard ,Pisanambakkam ,Chennai International Airport ,Dinakaran ,
× RELATED லண்டன் – சென்னை – லண்டன் பிரிட்டிஷ்...