×

மரத்தில் கட்டி வைத்து கும்பல் வெறி குரானை எரித்தவர் கல்லால் அடித்து படுகொலை: பாகிஸ்தானில் மீண்டும் பயங்கரம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை களங்கப்படுத்துவது பெரும் குற்றமாக கருதும், கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. இதற்கு மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது. அதே நேரம், அந்நாட்டு பழமைவாதிகளும், மக்களும் இந்த செயலில் ஈடுபடுபவர்களை தாக்கி கொல்லும் செயல் அதிகமாகி வருகிறது. இஸ்லாம் சம்பந்தப்பட்ட போஸ்டரை கிழித்ததாக, இலங்கையை சேர்ந்த ஒருவரை 300க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் கடந்த டிசம்பரில் கொடூரமாக தாக்கி, உயிருடன் எரித்து கொன்றது. உலகளவில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜங்கல் டேரா கிராமத்தில் முஸ்டாக் அகமது (41) என்பவர் குரான் நுாலின் பக்கங்களை கிழித்து, தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தொழுகை முடித்து கூட்டமாக வந்த மக்கள், இதை கேள்விப்பட்டதும் அகமதுவை தாக்க தொடங்கினர். இதை தடுக்க வந்த போலீசாரையும் அவர்கள் தாக்கினர். பின்னர், அந்த அகமதுவை  இழுத்து சென்று மரத்தில் கட்டிய கும்பல், சுற்றி நின்று கல்லால் தாக்கியது. வலியால் அவர் அலறி துடித்த போதும், இரக்கமின்றி தாக்குதல் தொடர்ந்தது. இறுதியில் அவர் உயிர் இழந்தார். அதன் பிறகும், அவரை எரிக்க கும்பல் முயன்றது. போலீசார் அதை தடுத்தனர். இருப்பினும், உடலை மரத்தில் கட்டி கும்பல் தொங்க விட்டது. அகமது  சிறிது மனநிலை பாதித்தவர் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். தாக்குதல் தொடர்பாக போலீசார் 62 பேரை கைது செய்துள்ளனர்….

The post மரத்தில் கட்டி வைத்து கும்பல் வெறி குரானை எரித்தவர் கல்லால் அடித்து படுகொலை: பாகிஸ்தானில் மீண்டும் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,ISLAMABAD ,Islam ,
× RELATED பாக். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக...